கோப்பு படம் 
செய்திகள்

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை கடத்திய கட்டிட தொழிலாளி கைது

நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை கடத்தியதாக கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

குளச்சல்:

பூதப்பாண்டி அருகே அரும நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்சன். இவரது மகன் சுஜின்(வயது24). கட்டிடத் தொழிலாளி. சுஜின் கடந்த சில வருடங்களாக குடும் பத்தினருடன் அருமனை அருகே உள்ள காருபாறையில் வசித்து வந்தார்.

தற்போது 6 மாதத் திற்கு முன்பு சுஜின் குடும்பத்தினருடன் அருமநல்லூரில் சொந்த வீடு கட்டி அங்கு வசித்து வருகின்றார். அவர் காருபாறையில் வசித்து வந்தபோது நித்திரவிளை பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 4-ந்தேதி கல்லூரி மாணவி மாயமானார். இதுகுறித்து அவரது உறவினர் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய் தார். புகாரின் பேரில் போலீசார் சுஜின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீசார் கல்லூரி மாணவியை சுஜின் வீட்டில் மீட்டனர். இருவரையும் குளச்சல் மகளிர் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் சுஜின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சுஜின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட மாணவி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.