8 அணிகள் இடையிலான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் பிரிஸ்டலில் நேற்று நடந்த 19-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 259 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 256 ரன்களே எடுக்க முடிந்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. உலக கோப்பையில் 1993-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியாவை இங்கிலாந்து அணி வீழ்த்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு தொடரில் தொடர்ந்து 4 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த ஆஸ்திரேலியாவுக்கு இது முதலாவது தோல்வியாகும். அதே சமயம் 5-வது ஆட்டத்தில் ஆடிய இங்கிலாந்துக்கு 4-வது வெற்றியாகும்.