செய்திகள்

பெண்கள் கிரிக்கெட்: பாகிஸ்தானுக்கு 170 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது இந்தியா.

அதன்படி பூனம் ரவுட், ஸ்மிரிதி மந்தனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக சதம் அடித்த மந்தனா 2 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.


47 ரன்னில் அவுட்டாகிய சோகத்தில் பூனம் ரவுட்

அடுத்து ரவுட் உடன் தீப்தி ஷர்மா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியை விரைவாக ரன் எடுக்க விடாமல் பாகிஸ்தான் வீராங்கனைகள் நேர்த்தியாக பந்து வீசி தடுத்தனர். இதனால் இந்தியாவின் ரன் விகிதம் ஆமை வேகத்தில் நகர்ந்தது.

இந்திய அணியின் ஸ்கோர் 22.2 ஓவரில் 74 ரன்னாக இருக்கும்போது ரவுட் 72 பந்தில் 47 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டை பாகிஸ்தான் வீராங்கனை நஷ்ரா சந்து வீழ்த்தினார். அதன்பின் வந்த மிதாலி ராஜை 8 ரன்னில் வெளியேற்றினார். 63 பந்துகளை சந்தித்து 28 ரன்கள் எடுத்த ஷர்மாவையும் பெவிலியனுக்கு அனுப்பினார் நஷ்ரா சந்து. இதனால் இந்தியா 94 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.


மந்தனா விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் டயானா பெய்க்

5-வது வீரராக களம் இறங்கிய ஹர்மன்ப்ரீத் கவுர் 10 ரன்னிலும், மோனா மேஷ்ரம் 6 ரன்னிலும் வெளியேறி அதிர்ச்சி அளித்தனர்.

விக்கெட் கீப்பர் சுஷ்மா வர்மா 35 பந்தில் 33 ரன்கள் எடுக்க இந்தியாவின் ஸ்கோர் 150 ரன்னைத் தாண்டியது. 47, 48 மற்றும் 49-வது ஓவர்களில் தலா ஒரு விக்கெட்டுக்களை இந்தியா இழக்காமல் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. பூணம் யாதவ் 6 ரன்னுடனும், மான்சி ஜோஷி 4 ரன்னுடனும் களத்தில் களத்தில் இருந்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. பாகிஸ்தான் அணி சார்பில் நஷ்ரா சந்து 10 ஓவர்கள் வீசி 26 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

SCROLL FOR NEXT