மகளிர் சுய உதவிக்குழு கடனுதவிகளை பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார் 
செய்திகள்

24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி- பன்னீர்செல்வம் எம்எல்ஏ வழங்கினார்

கலசபாக்கம் ஒன்றியத்தில் 24 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகளை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. வழங்கினார்.

மாலை மலர்

கலசபாக்கம்:

கலசபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரளூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் மூலம் 24 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நேரடி கடன் தொகையாக ரூ.54 லட்சத்து 44 ஆயிரமும், கொரோனா கடனுதவியாக ரூ.56 லட்சத்து 50 ஆயிரமும், தனிநபர், சிறுபான்மையர் குழு கடன் திட்டத்தின் கீழ் கடனுதவியாக ரூ.20 லட்சமும், பயிர்கடன் திட்டத்தில் ரூ.29 லட்சத்து 71 ஆயிரமும் என ரூ.1 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் 396 உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் விழா சங்கத்தில் நடந்தது.

சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வி.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கி பேசினார். இதில் வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பொய்யாமொழி, சங்கத்தலைவர் கண்ணன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.