செய்திகள்

பெண்கள் கிரிக்கெட் சூப்பர் லீக்- இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபார சதம்

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கிரிக்கெட் சூப்பர் லீக்கில் இந்திய வீராங்கனை 60 பந்தில் சதம் அடித்து அசத்தினார். #SmiritiMandhana

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பெண்களுக்கான கிரிக்கெட் சூப்பர் லீக்கில் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா வெஸ்டர்ன் ஸ்டோர்ம் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் லங்காஷைர் தண்டர் அணியை எதிர்த்து விளையாடியது.

முதலில் விளையாடிய லங்காஷைர்  20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்டர்ன் ஸ்டோர்ம் களம் இறங்கியது. இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படத்தினார். அவர் 60 பந்தில் 12 பவுண்டரி, 4 சிக்சருடன் சதம் அடித்து அசத்தினார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 102 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டெய்லர் 34 பந்தில் 33 ரன்கள் அடிக்க வெஸ்டர்ன் ஸ்டோரம் 18.2 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார பெற்றி பெற்றது.