கைது 
செய்திகள்

வத்தலக்குண்டு அருகே பெண்ணை மானபங்கம் செய்தவர் கைது

வத்தலக்குண்டு அருகே பெண்ணை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மாலை மலர்

வத்தலக்குண்டு:

வத்தலக்குண்டு அருகே பழைய வத்தலக்குண்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி மகன் உதயநிதி (வயது 25). இவர் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த 20 வயது இளம் பெண்ணை கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். தப்பி செல்ல முயன்ற உதயநிதியை மடக்கி பிடித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.