தற்கொலை 
செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை

ஊத்துக்கோட்டை அருகே தீராத வயிற்று வலி காரணமாக பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

மாலை மலர்

ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பனப்பாக்கம் கிராமம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் குமார். டிரைவர். இவருக்கு மனைவி லட்சுமியும், இரண்டு மகன்களும் உள்ளனர். லட்சுமி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல டாக்டர்களிடம் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் விரக்தி அடைந்த அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் சென்னை அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பலியானார். இது குறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை நடத்தி வருகிறார்.