செய்திகள்

சென்னை கமிஷனர் அலுவலகம் வாசலில் பெண் தீக்குளிக்க முயற்சி

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வாசலில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர். #chennaiCommissionerOffice

சென்னை:

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தீர்க்கக்கோரி மனு அளிப்பதற்காக இங்கு வருகிறார்கள்.

இந்நிலையில்,செல்வி என்ற பெண் இன்று காலை ஆணையர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.பிரதான வாசல் அருகே வந்த இவர் திடீரென தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது ஆணையர் அலுவலக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று அந்தப் பெண்ணையும், அவருடன் வந்திருந்த அவரது மகள் பூஜாவையும் தடுத்து நிறுத்தி காப்பாற்றினர்.

அவர்கள் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்? என்பது போலீசார் விசாரணை நடத்தினர். இச்சம்பவம் ஆணையர் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

SCROLL FOR NEXT