கையில் சிலம்புடன் கண்ணகி கோவிலுக்குள் செல்ல முயன்ற நர்மதா. 
செய்திகள்

கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க கோரி ஒற்றை சிலம்புடன் வந்த பெண் சமூக ஆர்வலர்

தேனி அருகே கண்ணகி கோவிலுக்குள் சிலம்புடன் செல்ல முயன்ற பெண்ணை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

மாலை மலர்

கூடலூர்:

சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோவிலுக்கு பாதை அமைக்க வலியுறுத்தி கோவிலுக்குள் செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் நர்மதா கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். பின்னர் மீண்டும் பொங்கல் தினத்தன்று தடையை மீறி கண்ணகி கோவிலுக்குள் சென்று பொங்கல் வைக்க முயன்றதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

நேற்று பளியன்குடியில் இருந்து தமிழக வனப்பகுதி வழியாக கண்ணகி கோவில் வரை சாலை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கையில் சிலம்புடன் நர்மதா சென்றார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினரும் போலீசாரும் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது நர்மதா தெரிவிக்கையில், கண்ணகி கோவிலுக்கு செல்வதற்கு பக்தர்களுக்கு தினந்தோறும் அனுமதி அளிக்க வேண்டும்.

கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும். வரும் சித்ரா பவுர்ணமி அன்று ஏராளமான பக்தர்களை வரவழைத்து விழா நடத்த வேண்டும். இல்லையெனில் மாணவர்களை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்தார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.  #tamilnews