செய்திகள்

கடையநல்லூரில் வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணிடம் நகை பறிப்பு

வீட்டில் படுத்து தூங்கிய பெண்ணிடம் 7 பவுன் நகையை கொள்ளையன் பறித்து சென்று விட்டான். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலை மலர்

நெல்லை:

கடையநல்லூரில் உள்ள மேலகடையநல்லூரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சத்தியவாணி (வயது22). இவர் நேற்று காலை வீட்டுக் கதவை திறந்து வைத்த நிலையில் படுத்து தூங்கி கொண்டு இருந்தார். அப்போது ஒரு வாலிபர் நைசாக உள்ளே நுழைந்து சத்யவாணி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான்.

சத்யவாணி அலறி கூச்சல் போட்டதால், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கொள்ளையனை தேடிப்பார்த்தனர். ஆனால் அவன் தப்பி ஓடி விட்டான்.

கொள்ளை போன நகையின்  மதிப்பு ரூ.1 1/2 லட்சம் ஆகும். இதுகுறித்து கடையநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்கள்.