செய்திகள்

தொடரும் பாலியல் வன்கொடுமைகள் - இளம் பெண்ணை வன்புணர்வு செய்தவர்களுக்கு வலைவீச்சு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 வயது இளம் பெண்ணை ஹோட்டல் அறையில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்த இருவரை கைது செய்யும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #UttarPradesh

லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலத்தில் 23 வயது இளம் பெண்ணை அவரது தந்தைக்கு ஆபத்து எனக்கூறி, காரில் இருவர் கடத்திச் சென்றுள்ளனர். ஹரித்வாரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண் இருவராலும் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக பெண் அளித்த புகாரில், பாரதீய கிசான் யூனியன் இளைஞர் அமைப்பின் தலைவர் வினோத் நிர்வால் மற்றும் அவரது நண்பர் ஜஹித் ஹசா ஆகியோர் இணைந்து தம்மை பாலியல் வன்புணர்வு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் இருவரையும் தேடி வருகின்றனர். #UttarPradesh