மாயம் 
செய்திகள்

கோவையில் பெண் போலீஸ் மாயம்

கோவையில் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்ற பெண் போலீஸ் வீடு திரும்பாதது குறித்து அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை:

கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் குடியிருப்பை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி சுஜிதா (வயது 30). இவர்கள் 2 பேரும் மாநகர ஆயுதப்படை பிரிவில் போலீஸ் காரர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில் சுஜிதா 9 நாட்கள் விடுமுறையில் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்த அவர் விடுமுறை முடிந்தும் பணிக்கு திரும்பாமல் இருந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த சுஜிதா தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஸ்கேன் ரிப்போட் வாங்கி விட்டு வருவதாக தனது கணவரிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இது குறித்து சங்கர் தனது மனைவியை காணவில்லை என ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பெண் போலீஸ் சுஜிதாவை தேடி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT