செய்திகள்

சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல்: தொழிலாளி கைது

சங்கரன்கோவில் அருகே பெண் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அடுத்த மேலநீலிதநல்லூரை சேர்ந்த பிச்சையா மனைவி அருணாசல வடிவு (வயது40). சம்பவத்தன்று இவர்களது ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நெல்லை பேட்டையை சேர்ந்த ராஜ்குமார் (40) என்பவர் வந்துள்ளார்.

ராஜ்குமார் ஏற்கனவே பேட்டையில் வசித்து வரும் அருணாசல வடிவின் மகளிடம் அடிக்கடி போனில் பேசி தொல்லை கொடுத்து வந்தாராம். இதையடுத்து ராஜ்குமாரை நேரில் பார்த்த அருணாசல வடிவு அவரை கண்டித்தார். இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார், அருணாசல வடிவை தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். 

இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த பனவடலிசத்திரம் போலீசார் ராஜ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.