மாயம் 
செய்திகள்

சிங்காரப்பேட்டை அருகே பெண் மாயம்

சிங்காரப்பேட்டை அருகே வீட்டை விட்டு வெளியே சென்ற பெண் மாயமானது குறித்து அவரது உறவினர்கள் போலீசில் புகார் செய்தனர். போலீசார் அவரை தேடி வருகிறார்கள்.

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த பெரியதள்ளப்பாடி பெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மனைவி தங்கம்மாள் (வயது 55). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்ற தங்கம்மாள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது உறவினர் காத்தியம்மாள் கொடுத்த புகாரின் பேரில் சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான தங்கம்மாளை தேடி வருகின்றனர்.