நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள திருவள்ளுவர் காலனி 6-வது தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஸ்வீட்லின் நாசரேத்தில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 20-ந் தேதி காலை 8 மணிக்கு வேலைக்கு சென்ற அவர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை.
இதுகுறித்து இசக்கிமுத்து மனைவி சத்தியவாணி நாசரேத் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஸ்வீட்லினை தேடி வருகின்றனர்.