செய்திகள்

தங்கச்சிமடத்தில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி

தங்கச்சிமடம் பகுதியில் பெண் ஒருவர் மர்ம காய்ச்சலுக்கு பலியானார்.

ராமேஸ்வரம்:

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் அந்தோணியார்புரத்தை சேர்ந்த மீனவர் அந்தோணிராஜின் மனைவி கதீஜா (வயது 24).இவருக்கு மர்ம காய்ச்சல் வந்தது. இதையடுத்து அவரை ராமநாதபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கும் சிகிச்சை பலன் தரவில்லை.

இதனால் கதீஜா மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 24-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே பன்றி காய்ச்சல் காரணமாக கதீஜா இறந்ததாக ஊருக்குள் வதந்தி பரவியது.

சுகாதார அதிகாரியிடம் இதுபற்றி கேட்டபோது:-

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி கதீஜாவுக்கு பன்றிக்காய்ச்சல் இல்லை. அவருக்கு நிமோனியா காய்ச்சல் இருந்ததாக டாக்டர்கள் கடந்த 26-ந் தேதி அறிக்கை சமர்ப்பித்து உள்ளனர். இருந்தபோதிலும் கதீஜாவுக்கு வந்த மர்ம காய்ச்சல் தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.