செய்திகள்

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் படைகள் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் பெண் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பெண்மணி ஒருவர் பலியானார். #JammuKashmir #Poonch

மாலை மலர்

ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் அப்பாவி பெண்மணி ஒருவர் பலியானார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சர்வதேச எல்லைக் கோட்டு பகுதியில் இன்று மாலை பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின.

அவர்கள் தங்களிடம் இருந்த சிறு கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கிகளால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அதே பகுதியை சேர்ந்த 45 வயது அப்பாவி பெண்மணி பரிதாபமாக பலியானார்.

பாகிஸ்தான் படையினர் தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

எல்லையில் போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் சிக்கி, இந்த ஆண்டில் மட்டும் அப்பாவி பொதுமக்கள் 9 பேர் உள்பட 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 75-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #JammuKashmir #Poonch