செய்திகள்

திருமணம் ஆகாவிட்டாலும் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றம் இல்லை - சுப்ரீம் கோர்ட்டு கருத்து

திருமண வயதுக்கு வந்து விட்டால் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வதை குற்றமாக கருத முடியாது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கூறியுள்ளனர். #SupremeCourt

கேரளாவை சேர்ந்த நந்தகுமார் என்பவர் துசாரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்தியாவில் ஆண்களுக்கு 21 வயதும், பெண்களுக்கு 18 வயதும் திருமண வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், துசாராவுக்கு 18 வயது நிரம்பி இருந்தது. ஆனால், நந்தகுமாருக்கு 21 வயது நிரம்பவில்லை. எனவே, இந்த திருமணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று துசாராவின் தந்தை கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து கோர்ட்டு அந்த திருமணத்தை ரத்து செய்தது. ஆனாலும், அவர்கள் இருவரும் கணவன்- மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

தனது மகளை நந்த குமாரிடம் இருந்து பிரித்து தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அவரது தந்தை வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூ‌ஷன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் திருமண வயதுக்கு வந்து விட்டால் ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்வதை குற்றமாக கருத முடியாது.

SCROLL FOR NEXT