செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் என்ஜினீயர் தற்கொலை

காதல் திருமணத்தை பெற்றோர் ஏற்காததால் பெண் என்ஜினீயர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #WomanSuicide

மாலை மலர்

போரூர்:

மதுரவாயல் ராஜீவ் காந்தி நகர் 2-வது மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற ஞான பிரகாஷ் மெக்கானிக்கல் என்ஜினீயர்.

இவரது மனைவி காயத்ரி (25) ஒரகடத்தில் என்பீல்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞானபிரகாஷ் மற்றும் காயத்ரி இருவரும் காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகு இரண்டு பேர் வீட்டிலும் சேர்க்கவில்லை. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இதனால் காயத்ரி மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு கணவர் ஞான பிரகாஷ் அலுவலக வேலை காரணமாக புனே சென்று இருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்ததும், மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

உடல் மருத்துவ பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டது. திருமணம் நடந்து ஒரு வருடமே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துகிறார். #WomanSuicide