ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம், மகபூப் நகர் மாவட்டத்தை சேர்ந்த பேருந்தில் பயணம் செய்த ஒரு பயணியிடம் டிக்கெட் எடுக்குமாறு பெண் கண்டக்டர் கேட்டார். பெண் போலீஸ் சீருடையுடன் அமர்ந்திருந்த அந்தப் பயணி அடையாள அட்டையின் நகலை எடுத்து காட்டினார்.
அதை ஏற்றுக்கொள்ள மறுத்த கண்டக்டர் ஒரிஜினல் அடையாள அட்டையை காண்பிக்கும்படி கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த பெண் காவலர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மோதிக்கொள்ளும் காட்சியை பயணிகளில் சிலர் வீடியோவாக எடுத்து, ஊடகங்களில் வெளியிட்டனர்.
கண்டக்டர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மகபூப் நகரில் அரசு பேருந்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.