நாகர்கோவில்:
ஈத்தாமொழி அருகே மங்காவிளையை சேர்ந்தவர் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 38). இவரது மனைவி ஸ்ரீவிஜிலா (28). இவர்களுக்கு அஷிகா (9) என்ற மகளும், சுஜின் (6) என்ற மகனும் உள்ளனர்.
ஸ்ரீவிஜிலா வடசேரியில் உள்ள தனது தோழியை பார்க்க செல்லவேண்டுமென்று தனது கணவரிடம் கூறினார். இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை வடசேரி ஓட்டுபுரத் தெருவில் உள்ள அவரது தோழி வீட்டில் விட்டுச்சென்றார். மாலையில் ஸ்ரீகிருஷ்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்வதற்காக வந்தார். அப்போது மனைவி, குழந்தைகள் மற்றொரு தோழி வீட்டிற்கு சென்று இருப்பதாக தெரிவித்தனர்.
இதையடுத்து ஸ்ரீகிருஷ்ணன் அங்கு சென்று பார்த்தார். ஆனால் மனைவி, குழந்தைகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை பற்றி எந்த தகவலும் கிடைக்க வில்லை.
இதுகுறித்து வடசேரி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாம்ஜி வழக்குப்பதிவு செய்தார். மாயமான இளம்பெண் மற்றும் குழந்தைகளை தேடி வருகிறார்கள். #tamilnews