திருட்டு 
செய்திகள்

சின்னமனூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறிப்பு

சின்னமனூர் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்துச்சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி மாவட்டம் சின்னமனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகேசன் மனைவி சேதுலட்சுமி. இவரது சகோதரி ராசாத்தி. இவர்கள் இருவருக்கும் பூர்வீக சொத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பான வழக்கு உத்தமபாளையம் கோர்ட்டில் நடந்து வருகிறது.

சம்பவத்தன்று சேதுலட்சுமி முத்துலாபுரம் பஸ் நிறுத்தம் முன்பு நின்றுகொண்டிருந்தபோது ராசாத்தி, ரவி, பதிப்பூரணம் ஆகிய 3 பேரும் அவரிடம் தகராறு செய்து அடித்து தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1 பவுன் தாலிச்செயினை பறித்துக்கொண்டு கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து சேதுலட்சுமி அளித்த புகாரின்பேரில் சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT