கோப்பு படம் 
செய்திகள்

தொழில் அதிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி - பெண் கைது

ராயபுரம் அருகே தொழில் அதிபரிடம் ரூ.17½ லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராயபுரம்:

விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் மைக்கேல் ரிச். இவர் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வருகிறார். இவரிடம் தண்டையார்பேட்டையில் கார்மென்ட்ஸ் தொழில் செய்து வரும் சங்கீதா (39) என்பவர் தொழில் ரீதியாக ரூ.17 லட்சத்து 86 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக கடனை சங்கீதா திருப்பி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மைக்கேல் ரிச் தொடர்ந்து பணம் கேட்டதால் சங்கீதா 3 காசோலைகள் கொடுத்தார். ஆனால் அவரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் காசோலைகள் திரும்பி விட்டது.

இதுகுறித்து மைக்கேல் ரிச் தண்டையார்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மோசடி வழக்குப்பதிவு செய்த போலீசார் சங்கீதாவை கைது செய்தனர்.