செய்திகள்

ஒடிசா: குடிபோதையில் போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய பெண் கைது

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் மிதமிஞ்சிய போதையில் இருந்த ஒரு பெண் தனக்கு உதவி செய்ய வந்த போலீஸ்காரரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புவனேஸ்வர்:

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள ரெயில் நிலையத்தில் நேற்றிரவு மிதமிஞ்சிய போதையில் ஒரு பெண் விழுந்து கிடந்தார். அவரை எழுப்பி எங்கே செல்ல வேண்டும் என்று கேட்ட ஒரு போலீஸ்காரரை அந்தப் பெண் சரமாரியாக தாக்கினார்.

இதையடுத்து, உடனிருந்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்த ஆதார் அட்டையில் தெற்கு டெல்லியில் உள்ள லஜ்பத் நகரை சேர்ந்த துனியா கான் என குறிப்பிடப்பட்டுள்ளதால் அங்கிருந்து டெல்லி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

கைதான பெண்ணிடம் இருந்து விலையுர்ந்த செல்போன், பணம், மது பாட்டில் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவரை லாக்கப்பில் அடைத்து வைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT