செய்திகள்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிவி சிந்து 2 மணி நேரம் போராடி தோல்வி- வெள்ளி வென்றார்

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பிவி சிந்து போராடி ஜப்பான் வீராங்கனையிடம் வீழ்ந்தார். இதனால் வெள்ளி பதக்கத்துடன் விடைபெற்றார்.

மாலை மலர்

தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக விளையாடினார்கள். ஒருவொருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்காமல் விளையாடியதால் இருவரும் மாறிமாறி புள்ளிகள் பெற்றனர்.

ஒரு கட்டத்தில் இருவரும் 3-3 என சமநிலையில் இருந்தனர். அதன்பின் ஒகுஹாரா தொடர்ந்து இரண்டு புள்ளிகள் பெற்று 5-3 என முன்னிலைப் பெற்றார். அதன்பின் சிந்து நான்கு புள்ளிகள் பெற 7-5 என முன்னிலைப் பெற்றார். முதல் செட்டின் பாதி நேரத்தில் 11-5 என முன்னிலைப் பெற்றார் சிந்து.

அதன்பின் ஜப்பான் வீராங்கனை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 11-14 என முன்னேறினார். பின்னர் 13-14 என சிந்துவை துரத்தினார். அதன்பிறகு 16-14 என ஜப்பான் வீராங்கனை முந்தினார். அதன்பிறகு சிந்துவால் முன்னேற முடியவில்லை. 14-17 எனவும், 16-18 எனவும், 18-19 எனவும் பின்தங்கிய நிலையில் 19-21 என முதல் செட்டை இழந்தார். முதல் செட் ஆட்டம் 25 நிமிடங்கள் நீடித்தது.

2-வது செட்டில் பிவி சிந்து வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற கட்டாயத்தில் விளையாடினார். இந்த செட்டை கைப்பற்றி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ஒகுஹாரா திட்டமிட்டு களம் இறங்கினார்.

இதனால் 2-வது செட் கடும் பரபரப்பாக சென்றது. ஒரு கட்டத்தில் பிவி சிந்து 6-2 என அதிக முன்னிலையில் இருந்தார். அதன்பின் 9-3 என பிரகாசமாக விளங்கினார். 2-வது செட்டின் முதல் பாதியில் 11-8 என சிந்து முன்னிலை பெற்றார்.

அதன்பின் ஒகுஹாரா 13-12 என முன்னிலைப் பெற்றார். இதனால் போட்டியில் பரப்பரப்பு தொற்றிக் கொண்டது. பின்னர் ஆக்ரோசமான ஆட்டத்தை பிவி சிந்து வெளிப்படுத்த 16-13 என சிந்து முன்னிலைப் பெற்றார். பின்னர் ஸ்கோர் இழுபறியாக சென்றது.

சிந்து 20-17 என முன்னிலையில் இருந்தபோது 21-17 என 2-வது செட்டை கைப்பற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒகுஹாரா தொடர்ச்சியாக மூன்று புள்ளிகள் பெற்று சிந்துவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதனால் ஸ்கோர் 20-20 என சமநிலைப் பெற்றது. அதன்பின் சிந்து அபாரமான இரண்டு புள்ளிகள் பெற்று 22-20 என 2-வது செட்டை கைப்பற்றினார். இந்த வெற்றியை பெற பிவி சிந்திவிற்கு 38 நிமிடங்கள் தேவைப்பட்டது.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை இருவரும் எதிர் கொண்டனர். தொடக்கத்தில் 1-3 என பிவி சிந்து பின்தங்கியிருந்தார். அதன்பின் 5-5 என சமநிலை அடைந்தார்.

பின்னர் 9-7 என சிந்து முன்னிலையில் இருந்தார். பிவி சிந்து பர்வீஸை முறியடித்த ஒகுஹாரா, தனது சர்வீஸையும் சிறப்பாக பினிஷ் செய்தார். இதனால் 9-9 என ஸ்கோர் சமநிலைப் பெற்றது. அடுத்து ஒகுஹாரா செய்த சர்வீஸை மின்னல் வேகத்தில் முறியடித்தார் சிந்து. அடுத்த புள்ளியையும் பெற்று பாதி நேரத்தில் 11-9 சிந்து முன்னிலைப் பெற்றார்.

பின்னர் ஆட்டம் இழுபறியாக சென்றது. 14-14, 15-15 என சமநிலையில் சென்றது. ஒரு கட்டத்தில் சிந்து 19-17 என முன்னிலையில் இருந்தார். அதன்பின் ஒகுஹாரா தொடர்ச்சியாக இரண்டு புள்ளிகள் பெற்றார். இதனால் ஸ்கோர் 19-19 என சமநிலைப் பெற்றது.