பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. ஸ்மித் (61), டவ்ரிச் (55) ஆகியோரின் அரைசதத்தால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 300 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
47 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. குசால் மெண்டிஸ் (87), டிக்வெல்லா (62) ஆகியோரின் அரைசதங்களால் இலங்கை அணி நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் 89 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் சேர்த்திருந்தது.
இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. மேலும் 2.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை 342 ரன்னில் ஆல்அவுட் ஆனது. வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் 8 விக்கெட்டுக்கள் சாய்த்தார். ஒட்டுமொத்தமாக இலங்கை 295 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 296 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.