வழக்கு பதிவு 
செய்திகள்

தலைக்கவசம் அணியாத 494 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற 494 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மாலை மலர்

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைத்துரை தலைமையிலான போலீசார் ராமநாதபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை மீறியவர்கள் மீது வழக்குபதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டது. இவ்வாறு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டிச்சென்ற 36 பேர் மீதும், சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்ற ஒருவர் மீதும், தலைக்கவசம் அணியாமல் சென்ற 414 பேர் மீதும், தலைக்கவசம் அணியாமல் பின்னால் அமர்ந்து சென்ற 80 பேர் மீதும், ஓட்டுனர் உரிமம் இல்லாத 34 பேர் மீதும், இதர பிரிவுகளின் கீழ் 110 பேர் மீதும் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களிடம் இருந்து அபராதமாக ரூ.99,100 வசூலிக்கப்பட்டுள்ளது.