முதல் அரையிறுதிப் போட்டியில் 14-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முகுருசா, ஸ்லோவாகியாவின் மெக்டாலேனா ரிபாரிகோவாவை எதிர்கொண்டார்.
அனுபவ வீராங்கனையான முகுருசாவின் ஆட்டத்திற்கு தரநிலை பெறாத ரிபாரிகோவாவினாவால் ஈடுகொடுக்க முடியவில்லை. எந்தவித போராட்டமின்றி முகுருசா 6-1, 6-1 என எளிதில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இறுதிப் போட்டிக்குள் நுழைந்ததன் மூலம் இரண்டு முறை விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் ஸ்பெயின் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.