விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரில் ஆண்களுக்கான 3-வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு ஆட்டத்தில் 4-ம் நிலை வீரரான தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன் 26-ம் நிலை வீரரான அர்ஜெண்டினாவின் குய்டோ பெல்லாவை எதிர்கொண்டார்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்து கெவின் ஆண்டர்சன் மிகவும் திணறினார். பெல்லாவின் அதிரடி சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் திணறினார். இதனால் முதல் இரண்டு செட்களையும் 6-4, 6-3 என இழந்தார்.
3-வது சுற்றில் சிறப்பாக விளையாடினார். இருந்தாலும் பெல்லா பதிலடி கொடுத்தார். இதனால் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதில் பெல்லா 7(7)-6(4) என கைப்பற்றி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.