லண்டன்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான் விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது.
உலகின் முதல்நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 3-வது சுற்றில் போலந்து வீரர் ஹர்காக்சே எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 7-5, 6-7 (5-7), 6-1, 6-4 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்ற ஆட்டங்களில் வெர்டஸ்கோ (ஸ்பெயின்), மெட்வதேவ் (ரஷ்யா) ஆகியோரும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்கள்.
உலலின் 7-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹெலப் (ருமேனியா), 3-வது சுற்றில் அசரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார்.
இதில் ஹெலப் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்ற ஆட்டங்களில் சுவிட்டோலினா (உக்ரைன்), பிளிஸ்கோவா (ரஷியா) ஆகியோரும் வெற்றி பெற்றனர்.