செய்திகள்

விம்பிள்டன்- மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்த 3-ம் நிலை வீரர்

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் தொடரில் மூன்றேகால் மணி நேரம் போராடி தோல்வியை சந்தித்துள்ளார் 3-ம் நிலை வீரர் மரின் சிலிச். #Wimbledon2018 #Cilic

மாலை மலர்

முதல் இரண்டு செட்டுகளையும் மரின் சிலிச் 6-3, 6-1 என எளிதில் கைப்பற்றினார். இதனால் 3-வது செட்டை கைப்பற்றி 3-வது சுற்றுக்கு முன்னேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 2-வது செட் முடிவடைந்த பின்னர் பெல்லா ஆட்டத்தில் அனல் பறந்தது. மரின் சிலிச்சை அதிர வைத்தார். 3-வது செட்டை 6-4 எனக் கைப்பற்றினார். 4-வது செட்டிலும் கடும் போட்டி கொடுத்தார். மரின் சிலிச்சும் பதிலடி கொடுக்க ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் பெல்லா 7(7) - 6 (3) என கைப்பற்றினார்.

இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 5-வது செட்டில் இருவரும் களம் இறங்கினார்கள். இதிலும் மரின் சிலிச்சால் ஜொலிக்க முடியவில்லை. 5-வது செட்டை 5-7 என இழந்தார். இதனால் கடைசி மூன்று செட்டுகளை தொடர்ந்து இழந்து 2-வது செட்டோடு விடைபெற்றார் மரின் சிலிச்.