முதல் செட்டை 6-4 என ஜோகோவிச் வென்றார். 2-வது செட்டில் ஆக்ரோசமான ஆட்டத்தை நடால் வெளிப்படுத்தினார். இதனால் 6-3 என 2-வது செட்டை கைப்பற்றினார். 3-வது செட்டில் இருவரும் மல்லுகட்டினார்கள். இதனால் ஆட்டம் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் 7(11) - 6(9) என ஜோகோவிச் கைப்பற்றினார். 4-வது செட்டை நடால் 6-3 என எளிதில் கைப்பற்றினார்.
இதனால் இருவரும் 2-2 என சமநிலையில் இருந்தனர். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டில் வெற்றி பெற்றாக வேண்டும் என இருவரும் களம் இறங்கினார்கள். இறுதியில் ஜோகோவிச் கையே ஓங்கியது அவர் 10-8 என ஐந்தாவது செட்டை கைப்பற்றி வெற்றி பெற்றார்.