செய்திகள்

விம்பிள்டன்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் முகுருசா, கெர்பர் முதல் சுற்றில் வெற்றி

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முகுருசா, ஏஞ்சலிக் கெர்பர் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.

மாலை மலர்

14-ம் நிலை வீராங்கனை முகுருசா ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸான்ட்ரோவாவை எதிர்கொண்டார். இதில் முகுருசா 6-2, 6-4 என நேர்செர் கணக்கில் வெற்றி பெற்றார். நெதர்லாந்தை சேர்ந்த 23-ம் நிலை வீராங்கனை கிகி பெர்டென்ஸ் தரவரிசை பெறாத ரொமானியாவின் சொரானா சிர்ஸ்டியாவிடம் 6(4) - 7(7), 5-7 என வீழ்ந்தார்.


முகுருசா

13-ம் நிலை வீராங்கனை ஓஸ்டாபென்கோ 6-0, 1-6, 6-3 என சாஸ்னோவிச்சை வீழ்த்தினார். 16-ம் நிலை வீராங்கனை பவ்லியுசோன்கோவா 6-3, 7(8) - 6(6), 9-7 என ரோடியானோவாவிடம் வீழ்ந்தார்.