‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை வென்ற பிரிட்டனின் ஆன்டி முர்ரே 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மூன்றாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் அவரை எதிர்த்து ஆடிய இத்தாலியின் பேபியோ ஃபோக்னினியை 6-2, 4-6, 6-1, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இருவருக்குமிடையே இதுவரை 6 போட்டிகள் நடைபெற்றுள்ள. இதில் கடைசி மூன்று போட்டிகளில் ஃபோக்னினி தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டு மணிநேரம் 39 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் 4 செட்களில் 3 செட்களை முர்ரே கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வருகிற திங்கள்கிழமை நடைபெறும் 4-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் பிரெஞ்சின் பெனோயிட் பேரை, ஆன்டி முர்ரே சந்திக்க இருக்கிறார்.