செய்திகள்

உவரி அருகே மனைவி திட்டியதால் தொழிலாளி தற்கொலை

உவரி அருகே கணவர் வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

திசையன்விளை:

உவரி அருகே உள்ள வல்லான்விளையை சேர்ந்தவர் தங்கவேல் மகன் சித்திரை பெருமாள் (வயது48). பனை ஏறும் தொழிலாளியான இவர் மதுகுடிக்கும் பழக்கம் உள்ளவர். ஒழுங்காக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி கண்ணகி, சித்திரை பெருமாளை திட்டியுள்ளார்.

இதனால் மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உறவினர்கள் மீட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சித்திரை பெருமாள் பரிதாபமாக இறந்தார். 

இதுபற்றி அவரது மனைவி கண்ணகி உவரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பர தானு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.