செய்திகள்

குளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தற்கொலை

குளச்சல் அருகே மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

குளச்சல்:

குளச்சல் அருகே உள்ள சைமன் காலனியைச் சேர்ந்தவர் மிக்கேல் ஸ்டார்பின் (வயது 35). இவர் மீன் பிடித்தொழில் செய்து வந்தார்.

இவரது மனைவி மேரி மஜோரா. இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு மகள் உள்ளார்.

மிக்கேல் ஸ்டார்பினுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அவர் அடிக்கடி குடித்து விட்டு வந்து தகராறு செய்து வந்தார். அவரது மதுப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் அவர்களுக்குள் தகராறு உருவானது.

இந்தநிலையில் நேற்றும் இதுதொடர்பாக கணவன்-மனைவி இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இரவு மிக்கேல் ஸ்டார்பின் வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்றார். நீண்டநேரமாகியும் அவர் கீழே வராததால் அவரது குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது தொட்டில் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுபற்றி குளச்சல் போலீசில் மேரிமஜோரா புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துராமன் வழக்குப்பதிவு செய்து மிக்கேல் ஸ்டார்பின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.