கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், குருபரபள்ளி அருகே உள்ள பச்சிகானப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பைரப்பன் மகன் செல்வம் (35). இவர் கார்பெண்டராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி அஸ்வினி (28) என்ற மனைவி உள்ளார். இவர் கடந்த 15-ம் தேதி வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு மளிகைப் பொருட்கள் வாங்கி வருவதாக கூறிசென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த செல்வம் தனது மனைவியை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை என்பதால், இதுகுறித்து குருபரபள்ளி போலீசில் புகாரளித்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் நடத்திய விசாரணையில் அஸ்வினி அதேப் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ்(35) என்பவருடன் பழக்கம் இருந்துள்ளதாகவும் அவருடன் சென்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குபதிவு செய்து அஸ்வினி மற்றும் சுரேஷ்யை தேடி வருகின்றனர்.