முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் 
செய்திகள்

டெல்லி திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி சிதம்பரமும், மகன் கார்த்தி சிதம்பரமும் நேற்று சந்தித்தனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி சிதம்பரமும், மகன் கார்த்தி சிதம்பரமும் நேற்று சந்தித்தனர்.

அதைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் பேசினார்.

அப்போது அவர், ‘‘இந்த வழக்கு விசாரணையெல்லாம், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான்’’ என்று விமர்சித்தார். மேலும், ‘‘நான் எனது வாராந்திர சந்திப்பு வழக்கப்படி அவரை (ப.சிதம்பரம்) சந்திக்க வந்தேன். அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த நடைமுறை விளையாட்டுகள் எதுவாக இருந்தாலும் அவை அரசியல் நாடகங்களுக்காக நடத்தப்படுகின்றன’’ என்றும் சாடினார்.