செய்திகள்

உல்லாசத்தை நேரில் பார்த்த கணவனை தாக்கிய மனைவியின் கள்ளக்காதலன்

நிலக்கோட்டை அருகே கணவனை தாக்கிய மனைவி மற்றும் கள்ளக்காதலன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

நிலக்கோட்டை:

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை புதுதெருவை சேர்ந்தவர் ரவிசந்திரன் (வயது48). ஜவுளி வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி (38). இவர்களுக்கு 2 குழந்தை உள்ளது.

விளம்பட்டி அருகே முத்துலாபுரம் பகுதியில் புதிதாக மெடிக்கல் ஸ்டோர் ரவிசந்திரன் வைத்துள்ளார். அங்கு செல்வி வந்து சென்றபோது விளாம்பட்டியை சேர்ந்த உக்கிரபாண்டி என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

சம்பவத்தன்று செல்வியும், உக்கிரபாண்டியும் உல்லாசமாக இருந்ததை ரவிசந்திரன் நேரில் பார்த்துள்ளார். அவர்களை தட்டிகேட்டபோது ஆத்திரம் அடைந்த உக்கிரபாண்டி, இரும்புத்துரை, கருப்பாயி ஆகியோருடன் சேர்ந்து ரவிச்சந்திரனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முருகேஸ்வரி, செல்வி, உக்கிரபாண்டி, இரும்புத்துரை, கருப்பாயி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.