ராகுல் காந்தி 
செய்திகள்

செங்கோட்டைக்கு அனுமதித்தது யார்?: தடுத்து நிறுத்துவது உள்துறை அமைச்சகத்தின் வேலை இல்லையா?- ராகுல் காந்தி கேள்வி

டிராக்டர் பேரணியின்போது விவசாயிகள் செங்கோட்டையை முற்றுகையிட்டதுதான், அவர்களுக்கு மிகப்பெரிய பின்விளைவாக ஏற்பட்டுள்ளது.

மாலை மலர்

குடியரசு தினத்தன்று விவசாயிகள் டெல்லி எல்லையில் டிராக்டர் பேரணி மேற்கொண்டனர். மூன்று இடங்களில் பேரணியை நடத்த டெல்லி போலீசார் அனுமதி அளித்தனர். டெல்லிக்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் பேரணியின்போது ஒரு குழுவினர் டெல்லிக்குள் நுழைந்து செங்கோட்டையை முற்றுகையிட்டனர். அத்துடன் கோபுரங்களில் ஏறி விவசாய சங்க கொடிகளை ஏற்றினர். அப்போது தேசியக்கொடியை அவமதித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மத்திய அரசு, உத்தர பிரதேச மாநில அரசுகள் விவசாயிகளை போராட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேற வலியுறுத்தி வருகிறது. பொதுமக்களும் விவசாயிகளுக்கு எதிராக திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்.பி.யுமான ராகுல் காந்தி ‘‘செங்கோட்டைக்கு விவசாயிகளை அனுமதித்தது யார்?. அவர்களை தடுத்து நிறுத்துவது உள்துறை அமைச்சகத்தின் வேலை இல்லையா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.