செய்திகள்

வங்காளதேசம்: சக்கர நாற்காலியில் தங்கம் கடத்திய ஆசாமி விமான நிலையத்தில் கைது

வங்காளதேசத்தில் உள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில், சக்கர நாற்காலியில் தங்கம் கடத்திய பலே ஆசாமியை சுங்க அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

டாக்கா: 

வங்காளதேசத்தில் உள்ள நீல்பமாரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜாமில் அக்தர். இவர் சிங்கப்பூரில்  சிப்ஸ் கடை வைத்துள்ளார். அடிக்கடி உறவினர்களை பார்க்க சிங்கப்பூரில் இருந்து வங்காளதேசம் வந்து செல்வது வழக்கம்.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதனால், விமான நிலையத்தில் அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

இதற்கிடையே, சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் இருந்து வெளியே வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஜாமில் முக்தரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பரிசோதனை செய்தனர். அவர் தன்னிடம் ஒன்றும் இல்லை என தெரிவித்தாலும், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை தனியறைக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

அப்போது அவர் உட்கார்ந்திருந்த சக்கர நாற்காலியில் கால்களுக்கு இடையே, 250 கிராம மதிப்பிலான தங்க கட்டிகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 25 கிலோ தங்கத்தின் சர்வதேச மதிப்பு ரூ.12.5 கோடி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, அவரை உள்ளூர் போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் ஜாமில் அக்தரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT