செய்திகள்

உணவு தானிய மானியத்தில் 2018 வரை மாற்றம் இல்லை: ராம் விலாஸ் பஸ்வான் தகவல்

உணவு தானியங்களுக்கான மானியத்தில் 2018-வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றும் அதுவரை தற்போதைய விலையிலேயே வழங்கப்படும் என்றும் மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் உறுதி அளித்துள்ளார்.

புதுடெல்லி:

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது, மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் உணவு தானிய மானியம் குறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் பேசினார். அவர் பேசியதாவது:-

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உணவு தானியங்களின் விலைகளை மாற்றலாம். ஆனால் 2018 வரை தற்போதுள்ள திட்டத்தையே தொடர முடிவு செய்துள்ளோம். இந்த திட்டத்தின்கீழ் நாட்டின் 81 கோடி மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் கோதுமை கிலோ 2 ரூபாய்க்கும், அரிசி கிலோ 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. 2018 வரை இந்த மானிய விலை அரிசி, கோதுமை ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

மத்திய அரசு இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துகிறது. யாரும் பட்டினி கிடக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.

இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT