செய்திகள்

வாட்ஸ்அப் இணை நிறுவனர் ஜான் கௌம் பதவி விலகுகிறார்

பேஸ்புக் விவகாரத்தில் தனது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என்பதால் வாட்ஸ்அப்பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக ஜான் கௌம் அறிவித்துள்ளார். #whatsApp #JanKoum

மாலை மலர்

நியூயார்க்:

‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனராக ஜான் கௌம் பதவி வகித்து வருகிறார். இவர் உக்ரைனை சேர்ந்தவர்.

இவர் ‘வாட்ஸ் அப்’பின் இணை நிறுவனர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ‘பேஸ்புக்’ விவகாரத்தில் அவரது தனிப்பட்ட வாதம் ஏற்கப்படவில்லை என கூறி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தின் துணை நிறுவனமாக ‘வாட்ஸ் அப்’ உள்ளது. இது கடந்த 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதை கடந்த 2014-ம் ஆண்டு ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடிக்கு ‘பேஸ்புக்’ நிறுவனம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.#whatsApp #JanKoum