செய்திகள்

12 பந்தில் 5 விக்கெட் வீழ்த்தி கல்லீஸ் சாதனையை சமன் செய்தார் ரோச்

வங்காள தேசதிற்கு எதிரான ஆட்டத்தில் 12 பந்தில் 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வீரர் கேமர் ரோச் சாதனைப் படைத்துள்ளார். #WIvBAN

மாலை மலர்

வங்காள தேச அணி 4.5 ஓவர் வரை விக்கெட் இழக்கவில்லை. கேமர் ரோச் வீசிய 5-வது ஓவரின் கடைசி பந்தில் தமிம் இக்பால் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

7-வது ஓவரை கேமர் ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் மொமினுல் ஹக்யூ (1) ஆட்டமிழந்தார். 9-வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் முஷ்பிகுர் ரஹிம் (0), 4-வது பந்தில் சாஹிப் அல் ஹசன் (0), 5-வது பந்தில் மெஹ்முதுல்லா (0) ஆட்டமிழந்தனர்.

இதன்மூலம் 5 ஓவரில் 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த ஐந்து விக்கெட்டுக்களையும் கடைசி 12 பந்தில் கைப்பற்றினார். இதன்மூலம் மிகவும் குறைவான பந்தில் 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றிய வீரர் என்ற உலக சாதனையுடன் ரோச் கைக்கோர்த்துள்ளார்.