செய்திகள்

புளோரிடாவில் வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் டி20 போட்டிகள்

புளோரிடாவில் வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேச அணிகளுக்கு இடையிலான இரண்டு டி20 போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. #WIvBAN

மாலை மலர்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அமெரிக்காவின் புளோரிடாவில் கிரிக்கெட் போட்டை ஊக்குவிக்க ஆர்வம் காட்டி வருகிறது. இதனால் வருமானம் பெருகும் என்பதால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இந்தியாவுடன் இரண்டு போட்டிகளை புளோரிடாவின் லாடர்ஹில் மைதானத்தில் நடத்தியது.

தற்போது வங்காள தேசத்திற்கு எதிரான மூன்று டி20 போட்டிகளில் இரண்டை புளோரிடாவில் நடத்துகிறது. முதல் போட்டி ஆகஸ்ட் 4-ந்தேதியும், 2-வது போட்டி 5-ந்தேதியும் நடக்கிறது.