செய்திகள்

பாகிஸ்தான் சென்று விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாட இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #PAKvWI

மாலை மலர்

பாதுகாப்பு காரணமாக பாகிஸ்தான் சென்று விளையாடுவதற்கு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் அச்சப்பட்டு வருகிறார்கள். எப்படியாவது பாகிஸ்தான் மண்ணில் சர்வதேச போட்டிகளை நடத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டது.

இதன்விளைவாக கடந்த அக்டோபர் மாதம் இலங்கை அணி பாகிஸ்தான் சென்று விளையாடியது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 1, 2, மற்றும் 3-ந்தேதிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தான் சென்று மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த மூன்று ஆட்டங்களில் கராச்சி சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.

இதற்கான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி வீரர்களான ஜேசன் ஹோல்டர், கிறிஸ் கெய்ல், கேப்டன் கார்லஸ் பிராத்வைட், சுழற்பந்து வீச்சாளர் தேவேந்த்ர பிஷூ ஆகியோர் இடம்பெறவில்லை. ஜேசன் முகமது கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் செல்லும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ஜேசன் முகமது (கேப்டன்), 2. சாமுவேல் பத்ரி, 3. ரயாத் எம்ரிட், 4. அந்த்ரே பிளெட்சர், 5. அந்த்ரே மெக்கார்த்தி, 6. கீமோ பால், 7. வீராசாமி பெருமாள், 8. ரோவ்மன் பொவெல், 9. தினேஷ் ராம்தின் (விக்கெட் கீப்பர்), 10, மார்லோன் சாமுவேல்ஸ், 11. ஓடியன் ஸ்மித், 12. சாத்விக் வால்டன், 13. கெஸ்ரிக் வில்லியம்ஸ்.