பள்ளிகளுக்கு விடுமுறை 
செய்திகள்

மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கோவாவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை

கொரோனா வைரஸ் பீதியால் நிலையில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, கோவாவில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு 31-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது.

மாலை மலர்

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 84 ஆக உயர்ந்துள்ளது.

அவர்கள் அனைவரும் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். கர்நாடக மாநிலத்தின் கலபருகி பகுதியில் ஒரு முதியவர். டெல்லியை சேர்ந்த ஒரு மூதாட்டி என இதுவரை இந்தியாவில் இருவர் கொரோனா தாக்கத்துக்கு பலியாகியுள்ளனர்.

இதேபோல், கோவா மற்றும் மகாராஷ்டிரா மாநில அரசுகளும் மார்ச் 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளன.