நீதிபதி கர்ணனை கைது செய்ய, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதால், மேற்கு வங்காள மாநிலத்தின் காவல் துறை தலைவராக விளங்கக் கூடிய போலீஸ் டி.ஜி.பி. தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்தார்.
டி.ஜி.பி.யுடன் கூடுதல் டி.ஜி.பி., துணை கமிஷனர், உதவி கமிஷனர், ஒரு இன்ஸ்பெக்டர் ஆகியோரும் சென்னை விரைந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் விமான நிலையத்தில் இருந்து நேராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கமிஷனர் கரன்சின்காவை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நீதிபதி கர்ணன், சேப்பாக்கம் அரசு விருந்தினர் இல்லத்தில் இருந்து காளஹஸ்திக்கு புறப்பட்டு சென்றது பற்றிய தகவல்களை அவர்கள் கேட்டுப்பெற்றனர்.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் குவிக்கப்பட்டுள்ள போலீசார்.