இந்திய பிரதமர் மோடி இன்று மாலை நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது இந்தியாவில் ஏழை மக்கள் உணவின்று தவிக்கக் கூடாது. இரவு உணவின்றி யாரும் படுக்கச் செல்லக்கூடாது. ஆகவே, 80 கோடி மக்கள் பயன் அடையும் வகையில் இலவச ரேசன் பொருட்கள் நவம்பர் மாதம் இறுதி வரை இலவசமாக வழங்கப்படும என்று அறிவித்தார்.
இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ‘‘மேற்கு வங்காளத்தில் இலவச ரேசன் பொருட்கள் அடுத்த ஆண்டு ஜூன் 2021 வரை வழங்கப்படும். மத்திய அரசின் ரேசன் திட்டத்தின்படி நாட்டின் 130 கோடி மக்களுக்கும் ரேசன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.