வெறிச்சோடிய சாலை 
செய்திகள்

டேராடூனில் கொரோனா ஊரடங்கு- வெறிச்சோடிய சாலைகள்

ஹரித்வார் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது.

டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து மாவட்டங்களிலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் டேராடூனில் வார இறுதி நாளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்படி இன்று டேராடூன் நகரில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முக்கிய சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. 

ஹரித்வாரில் நடைபெறும் கும்பமேளாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தொடர்ந்து தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் இரவு நேர ஊரடங்கு அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.